Published on 01/10/2022 | Edited on 01/10/2022

வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை 36 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் எல்பிஜியின் விலைக்கு ஏற்ப, இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, உணவகங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைக் கொண்ட சிலிண்டரின் விலை, இன்று (01/10/2022) 36 ரூபாய் குறைக்கப்பட்டு, 2,009 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தக சிலிண்டர் ஒன்று ரூபாய் 2,045- க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல், 1,068 ரூபாயாக நீடிக்கிறது.