கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் பிறந்தநாளை வித்தியாசமான முறையில் கொண்டாடுவது பேஷன் ஆகி வருகிறது. குறிப்பாக கத்தியால் கேக் வெட்டுவது, நடுரோட்டில் பைக்கை நிறுத்தி கேக் வெட்டுவது, வாளால் கேக் வெட்டுவது என்று பலரும் பலவிதமாக பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இளைஞர் ஒருவர் காட்டுக்குள் கேக் வெட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Happy Birthday ???pic.twitter.com/eDdyUgceBs
— CCTV_IDIOTS (@cctv_idiots) December 17, 2019
கேக் வெட்டி முடித்தவுடன் அதை நம்பர்களுக்கு எடுத்து ஊட்டி விடுவதற்குள் அவர்களிடம் இருந்து கேக்கை பறித்த குரங்கு ஒன்று மரத்திற்கு தூக்கி சென்றுவிடுகிறது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது அனைவராலும் விரும்பி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்த வீடியோ பார்த்துள்ளார்கள்.