பீகார் மாநிலம், கோசி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ரயில் பாலத்தை காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பீகாரில் கோசி ஆற்றின் குறுக்கே ரூபாய் 516 கோடி மதிப்பீட்டில் 1.9 கிலோமீட்டர் நீளத்திற்கு ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில் கோசி ஆற்றில் ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, 12 ரயில் திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பீகார் மாநிலத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் முடிக்கப்பட்ட திட்டங்களை தொடர்ச்சியாக துவக்கி வைத்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.