அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் நிலையில், தனது இந்திய வருகை குறித்து ட்ரம்ப் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த இரண்டு நாட்கள் பயணத்தில் ட்ரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். இன்று நண்பகல் அகமதாபாத் வரும் ட்ரம்ப்பை இந்திய பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார். அதன் பின் இரண்டு நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் தனது இந்திய பயணம் குறித்து இந்தியில் ட்வீட் செய்துள்ள ட்ரம்ப், "இந்தியாவுக்கு வருவதை எதிர்நோக்கியுள்ளேன். நாங்கள் வழியில் இருக்கிறோம், சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திப்போம்!" என தெரிவித்துள்ளார்.