மேற்கு வங்கத்தில் லோக்சபா தொகுதியான ஜல்பாய்குரியில் பிரதமர் மோடி பாஜகவிற்காக ஆதரவு திரட்ட இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மேற்கு வங்க மக்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்ன என்றால் தேநீர்தான். மேற்கு வங்க மக்கள் தேயிலை விதைப்பவர்கள், நான் தேநீர் உருவாக்குபவன்” என்று நெகிழ்ந்தார்.
மேலும் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து ஓய்வில் இருக்கும் தொழிலாளிகளுக்காக பென்சன் கொடுக்கும் திட்டத்தின் மூலம் பல தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்றார்.