Skip to main content

நாளை 10ஆம் வகுப்பு தேர்வுமுடிவுகள் : இன்று 42 ஆயிரம் விடைத்தாள்கள் மிஸ்ஸிங்!

Published on 19/06/2018 | Edited on 19/06/2018

நாளை 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், இன்று 42ஆயிரம் விடைத்தாள்களைக் காணவில்லை என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




test

 

 

பீகார் மாநிலத்தில் 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 20) வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இந்தத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் வேலைகள் நடைபெற்று வந்தன. இந்த வேலைகள் முடிந்ததும் சில விடைத்தாள்கள் கோபாலகஞ்ச் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.பல்லிகா இண்டர் அரசு பள்ளியில் உள்ள ஒரு அறையில் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வைக்கப்பட்டு, அறை சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூன் 15ஆம் தேதி சில விடைத்தாள்களை சரிபார்ப்பதற்காக ஆசிரியர்கள் அந்த அறையைத் திறந்து பார்த்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
 

மாணவர்களின் விடைத்தாள்கள் அடங்கிய 200க்கும் மேற்பட்ட பைகள் அறையில் இருந்து காணாமல் போயிருந்தன. இதில் தொலைந்துபோன விடைத்தாள்களின் எண்ணிக்கை 42ஆயிரம் என தற்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில், சம்மந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் மற்றும் பாதுகாவலரைக் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், நாளை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள் நிச்சயம் வெளியிடப்படும் என பீகார் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே மிகக்குறைந்த அளவு கல்வி வளர்ச்சி அடைந்த மாநிலமாக பீகார் உள்ளது. 2015ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வின் போது, பெற்றோர் கட்டிடங்களில் ஏறி காப்பியடிக்க உதவியது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்