Skip to main content

தந்தையை அமரவைத்து, 1200 கி.மீ. சைக்கிள் ஓட்டி வந்த 15 வயது மகள்...

Published on 22/05/2020 | Edited on 22/05/2020
fg



இந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்தான். அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் வேலை செய்து வந்த உடல்நலம் குன்றிய தந்தையுடன் 1200 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து பீகார் அழைத்து வந்துள்ளார். 


பீகாரை சேர்ந்தவர் மோகன். இவர் ஹரியானா மாநிலத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற விபத்தில் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் இருந்துள்ளார். உடல்நிலை குன்றியிருந்த தந்தையை அவருடைய மகள் ஜோதி பராமரித்து வந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் அங்கே இருந்து சிரமப்படுவதை காட்டிலும் சொந்த ஊரான பீகாருக்கு செல்லலாம் என்று முடிவெடுத்த அவர்கள், சைக்கிளில் 1200 கிலோ மீட்டர் பயணம் செய்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இந்த செய்தி தற்போது இந்தியா முழுவதும் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகின்றது.  இந்நிலையில் ஜோதிக்கு சில தேர்வுகள் வைத்து சைக்கிளிங் பெடரேசனில் பயிற்சியாளராக மாறும் தகுதி உள்ளதா என்ற சோதனை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்