Published on 08/01/2020 | Edited on 08/01/2020
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று (08.01.2020) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியாவில் முன்னணி பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நீலச்சல் இஸ்பட் நிகாம், தேசிய கனிம வளர்ச்சி நிறுவனம், MECON பங்குகளை விற்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்தது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சரவையின் முடிவு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது.