Skip to main content

வங்கிகள்  வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிப்பு!

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

"பேங்க் ஆப் பரோடா" (BOB) வங்கியுடன் தேனா வங்கி (DENA BANK) மற்றும் விஜயா வங்கி (Vijaya Bank) இணைக்கப்பட்டது . இந்த வங்கிகள் இணைப்பு நடைமுறை ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டுக்கு வந்தது . ஆனால் வங்கிகள் இணைப்பு தொழில்நுட்ப தாமதம் மற்றும் ATM இயந்திரங்களின் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டு "பேங்க் ஆப் பரோடா" வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது . 

இதில்  தேனா , விஜயா , பேங்க் ஆப் பரோடா ஆகிய மூன்று வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளை அனைத்து வங்கி (STATE BANK OF INDIA  BANK , CANARA BANK , IDBI BANK , INDIA OVERSEAS BANK , ICICI BANK , LAKSHMI VILAS BANK , CORPORATION BANK , KARNATAKA BANK , INDIAN BANK , KARUR VYSYA BANK ) உள்ளிட்ட ATM-கள் அனைத்தையும் பயன்படுத்தி பணம் (WITHDRAW AMOUNT) எடுக்கலாம் எனவும் , ATM - யைப் பயன்படுத்தி ரகசிய குறியீடு (PASSWORD NUMBER) மாற்றிக்கொள்ளலாம் எனவும் , வங்கி கணக்கில் உள்ள விவரங்கள் (MINI- STATEMENT) , BALANCE ENQUIRY உள்ளிட்டவை சேவையை எளிதாக வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி சேவையைக் கொள்ளலாம் என  "பேங்க் ஆப் பரோடா" வங்கித் தெரிவித்துள்ளது. 

 

bank



இந்த சேவை அனைத்தும் முற்றிலும் இலவசம் என "பேங்க் ஆப் பரோடா வங்கி" அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய வங்கியாக "பேங்க் ஆப் பரோடா" வங்கி திகழ்கிறது. இதில் நாடு முழுவதும் 9500 வங்கி கிளைகளும் , 13,400 ATMs இயந்திரங்களும் , சுமார் 85000 ஊழியர்கள் இந்த வங்கியில் பணியாற்றி வருகின்றனர். மேலும் 120 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்த வங்கியில் வங்கி கணக்கு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவ்வங்கி வாடிக்கையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் .


பி.சந்தோஷ் , சேலம் .
 

சார்ந்த செய்திகள்