Published on 10/12/2021 | Edited on 10/12/2021

இந்தியாவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மஹாராஷ்ட்ரா இருந்து வருகிறது. நாடு முழுவதும் முதல் மற்றும் இரண்டாவது கரோனா அலை ஏற்பட்டபோது அம்மாநிலத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக விளங்கியது.
அதிலும் குறிப்பாக தாராவி பகுதியில், கரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான ஒன்றாக இருந்தது. இந்தநிலையில் தாராவி பகுதியில் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நபர் தான்சானியாவில் இருந்து திரும்பிய நபர் என்றும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர் என்றும் பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் கூறியுள்ளது.
மேலும் அந்த நபருக்கு கரோனா அறிகுறிகள் இல்லையெனவும், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் கூறியுள்ளது.