Published on 08/11/2019 | Edited on 08/11/2019
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று (08/11/2019) உத்திர பிரதேச மாநில தலைமை செயலாளர், உத்தரபிரதேச மாநில டிஜிபியுடன்ஆலோசனை நடத்துகிறார். இதில் சட்டம்- ஒழுங்கு விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆலோசிக்கிறார்.
![AYODHYA CASE SUPREME COURT JUDGE DISCUSS WITH UP STATE DGP](http://image.nakkheeran.in/cdn/farfuture/ob7qGGa1MytL1XZ5y_2OvpqLUFRtjdKVM2H8k-XqVnI/1573194688/sites/default/files/inline-images/RAJINI33.jpg)
நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய நிலையில், தலைமை நீதிபதியின் ஆலோசனை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும் அயோத்தி வழக்கு தொடர்பான தீர்ப்பு நவம்பர் 13- ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.