டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்காக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய பேரணியாக சென்றார். மாலை 3 மணிவரை மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என்ற சூழலில் கேஜ்ரிவால் அங்கு வந்து சேர தாமதமாகியது. இதனால் தேர்தல் அதிகாரி அங்கிருந்து சென்று விட்டார். எனவே அங்கிருந்த அலுவலர்கள், காலதாமதமாகி விட்டதால் நாளை தான் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "மக்களை சந்தித்து விட்டு வருவதற்கு காலதாமதமாகி விட்டது. எனக்கு மக்கள் தான் முக்கியம். காலதாமதத்தை பற்றி நான் கவலைப்படவில்லை. நாளை வந்து வேட்புமனு தாக்கல் செய்வேன்’’ எனக் கூறினார்.