ஆந்திர மாநிலத்தின் எலூரு பகுதியில் உள்ள அல்லுரி சித்தராமா ராஜு மருத்துவ அறிவியல் கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கோடைகால விடுமுறை தர முடியாது என கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. இதனை எதிர்த்து அங்கு படிக்கும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினரை பாதுகாப்புக்காக அழைத்தது கல்லூரி நிர்வாகம்.
அப்போது போலீசார் அங்கு வந்த நிலையில் மாணவிகள் தங்கள் முகத்தில் துப்பட்டாவை கொண்டு மூடியபடி போராட்டம் நடத்தியுள்ளனர். பின்னர் அந்த மாணவிகளுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது அங்கு மஃப்டியில் இருந்த காவலர் ஒருவர் மாணவிகள் பேசுவதை வீடியோ எடுத்துள்ளார்.
வீடியோ எடுக்க வேண்டாம் என மாணவிகள் கேட்டுக்கொண்ட பின்னும் அவர் தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த ஒரு மாணவி காவலரின் கையிலிருந்த கைபேசியை வாங்கியுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் அந்த பெண்ணை தடுக்க முனைந்தபோது, அதற்குள் மஃப்டியில் இருந்த அந்த காவலர் அந்த மாணவியை இழுத்து தாக்கியுள்ளார்.
அதன்பின் அங்கிருந்த மற்றவர்கள் அந்த காவலரை அங்கிருந்து இழுத்து சென்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த மாணவி மட்டும் தனியாக அழைத்து செல்லப்பட்டு கல்லூரி நிர்வாகத்தால் மிரட்டப்பட்டுள்ளார். போராட்டத்தை நிறுத்த வேண்டும் எனவும், இனி வாயை திறந்து பேச கூடாது, பேசினால் வழக்கு பதிவு செய்து மோசமான விளைவுகளை சந்திக்க வைப்போம் என்றும் கல்லூரி நிர்வாகம் பேசியுள்ளது.
மேலும் 3 மாணவர்களும் தாக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த மாணவியை போல மாணவர் ஒருவரும் தனியாக அழைத்து சென்று மிரட்டப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
Such brutal assault by cops and college management at ASRAMS in AP! Absolutely ridiculous reaction because students asked for holidays!! pic.twitter.com/N1epCC2RDO
— Nimi (@nimeshika_j) May 2, 2019