Published on 02/07/2020 | Edited on 02/07/2020
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது.
தென்மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் கரோனாவின் எண்ணிக்கை சீரான வண்ணம் உயர்ந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 845 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,097 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு இன்று மேலும் 5 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 198 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாநிலத்தில் 7,313 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 8,586 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.