Published on 10/12/2018 | Edited on 10/12/2018
ஒடிசா மாநிலத்தின் அப்துல்கலாம் தீவிலிருந்து அக்னி 5 ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் தாக்கும் இந்த ஏவுகணை 5000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்கை கண்டறிந்து துள்ளியமாக தாக்கக்கூடியது. 1500 கிலோ எடையுள்ள வெடி பொருட்களை இந்த ஏவுகணையில் நிரப்ப முடியும். இந்த வகை ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த ஆறாவது நாடு இந்தியா ஆகும். இதற்கு முன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளிடம் இந்த வகை ஏவுகணை உள்ளது குறிப்பிடத்தக்கது.