மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பல்வேறு குழப்பங்களுக்கு பிறகு, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தது.
கடந்த மாதம் 28-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டதுடன், 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதன்பின்னர் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தொடர்ந்து குழப்பம் நிலவி வந்த நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் துணை முதல்வராக அஜித்பவார் மீண்டும் பதவியேற்றார். விதான் பவன் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு மஅமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது.