
இந்தியா முழுவதும் குட்கா பான் மசாலா, சிகரெட் உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், ஒரு சில மாநிலங்கள் அது முற்றிலும் தடை செய்திருந்தது. ஒரு சில மாநிலங்களில் அது தடை செய்யப்பட்டு இருந்தாலும், மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சராசரியாக ஒரு மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 2 லட்சத்தில் இருந்து 5 லட்சம் சிகரெட்டுகள் விற்பனையாகிறது. அதிலும் 10-ல், 8 பேர் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர், 10 சிகரெட்டுகள் பயன்படுத்துகிறார்.
ஆனால், சிகரெட்டுகளின் விற்பனை எண்ணிக்கையைத் தாண்டி புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. விளம்பரங்கள் மூலம், 'புகை பிடிப்பது உடலுக்குக் கேடு' என்று அறிவுறுத்தப்பட்டு வந்தாலும், எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்நிலையில் மத்திய அரசு புகை பிடிக்கக் கூடிய நபர்களின் வயதை, 18 லிருந்து 21 ஆக உயர்த்தி, ஒரு புதிய சட்டத்தை அமலாக்கத் திட்டமிட்டுள்ளது. விரைவில் அந்தச் சட்டம் அமல்படுத்தப்படும் நிலையில், புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.