Skip to main content

32 விரல்களை கொண்ட பாட்டி... ஒதுக்கி வைத்த கிராம மக்கள்!

Published on 25/11/2019 | Edited on 25/11/2019


ஒடிசாவில் உள்ள கடப்பாடா கிராமத்தில் வசிக்கும் மூதாட்டி குமாரி நாயக். இவர் பிறக்கும்போதே இவரது கைகளில் 12 விரல்களும், கால்களில் 20 விரல்களும் இருந்துள்ளன. அதனால் இவரை அந்த கிராம மக்கள் சூனியக்காரி என ஒதுக்கி வைத்துள்ளனர். கடந்த 65 ஆண்டுகாலமாக அந்த கிராமத்தில் வாழ்ந்து வரும் குமாரி நாயக் மக்கள் கண்களில் படாமல் வீட்டுக்குள்ளேயே பெரும்பான்மையான நேரங்களை கழித்து வருகிறார்.
 

kl



தன் வேதனையான வாழ்க்கை குறித்து கூறியுள்ள பாட்டி குமாரி நாயக் கூறும்போது, "இது இயற்கையானது என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள மூட நம்பிக்கைவாதிகள் பலர் என்னை சூனியக்கார கிழவி என்று மக்களிடையே பரப்பிவிட்டனர். என்னை மொத்த கிராமமும் ஒதுக்கி வைக்கிறது. என்னை அவர்கள் விசித்திரமான ஒரு உயிரினம் போல பார்ப்பது எனக்கு பிடிக்கவில்லை. அதனாலேயே வீட்டிற்குள் பெரும்பாலும் பதுங்கி வாழ்கிறேன்" என கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்