Published on 14/11/2019 | Edited on 14/11/2019
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்ற கிராமத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றில் 6 வயது சிறுவன் இன்று காலை தவறி விழுந்தான். இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் உடனடியாக சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவனை தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் பத்திரமாக மீட்டனர். தற்போது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.