மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் சாமி எலக்ட்ரானிக்ஸ் என்ற இந்திய நிறுவனம் 5000 ரூபாயில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டீவியை அறிமுகப்படுத்தியுள்ளது.ஆண்ட்ராய்டு 4.4 வெர்சன் கொண்டு இயங்கும் இந்த டீவியில் 512 எம்.பி ரேம், 4 ஜி.பி ஸ்டோரேஜ் கொண்டது.
32 இன்ச் திரை அளவு உடைய இந்த டீவி முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீவியில் பேஸ்புக், வாட்ஸப் போன்ற செயலிகளும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். டால்பி ஒலி தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள
இந்த டீவி நடுத்தர மக்களை மனதில் கொண்டு அவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது எனவும் மேலும் 32 இன்ச் திரை உடைய இந்த ஆண்ட்ராய்டு டீவி, 5000 ரூபாயில் விரைவில் கடைகளில் விற்பனைக்கு வரவுள்ளது எனவும் இதன் அறிமுக விழாவில் சாமி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.