Published on 19/05/2021 | Edited on 19/05/2021
இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது. மஹாராஷ்ட்ராவில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மஹாராஷ்ட்ராவில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்துவருகிறது. அதேபோன்று தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் கரோனா விஸ்வரூபம் எடுத்துவருகிறது.
இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், இதுவரை இந்தியாவில் 32.03 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று (18.05.2021) மட்டும் 20.08 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.