முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82 வயது) டெல்லியில் காலமானார்.
ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அரசியல், சமூக விவகாரங்களில் தனித்துவமான கண்ணோட்டத்திற்காக நினைவுகூரப்படுவார். பா.ஜ.க.வைவலுப்படுத்தியவர்களில் முக்கியமானவர் ஜஸ்வந்த் சிங்" என புகழாரம் சூட்டினார்.