திமுகவின் தலைவர் ஆகிவிட்ட பின்னரும் மு.க.ஸ்டாலினை ’தளபதி’ என்றுதான் அழைத்து வருகிறார்கள் கட்சியினர். இதுநாள் வரை ‘இளையதளபதி’ என்று அழைக்கப்பட்டு வந்த நடிகர் விஜய், ‘மெர்சல்’ படத்திலிருந்து தளபதி என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இதற்கிடையில் சின்னதளபதி, புரட்சி தளபதி என்றெல்லாம் முளைத்து காணாமல் போயின.
விஜய்யினால் ’தளபதி’ விவகாரம் அரசியல் வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற சர்க்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ‘நான் முதல்வரானால்....’என்று விஜய் பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அமைச்சர்கள் சிலர் விஜய் பேச்சுக்கு கமெண்ட் அடித்து எதிர்ப்பு தெரிவித்தாலும், அமைச்சர் மாபா பாண்டியராஜன், விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றுப்பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் ஒருவர், விஜய்யை தளபதி என அழைப்பதை திமுகவினர் எப்படி எடுத்துக்கொள்வார்கள்? என்று எழுப்பிய கேள்விக்கு, ‘’ஆம்!திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரிதான்!’ என்று பதிலளித்துள்ளார்.