Published on 07/02/2020 | Edited on 07/02/2020
கடந்த ஆண்டு நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான தேர்வில் கூடுதலாக 484 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலிப்பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 9,398ல் இருந்து 9,882 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமாவதும், குறைவதும் வழக்கமான ஒன்று தான். 9,882 காலிப்பாணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ள தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.