Published on 19/11/2019 | Edited on 19/11/2019
பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி தலைவர் தேர்வு செய்யும் முறை குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது. அதை தொடர்ந்து கூட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.
![tamilnadu govt cabinet meeting at chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/JZsdjmfbNXCAg9mmPkBG45_gpoexaUGoxSfNZ82jrCc/1574142527/sites/default/files/inline-images/cabinet.jpg)
தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.