Published on 31/10/2020 | Edited on 31/10/2020
![tamilnadu govt announced transport resuming puducherry](http://image.nakkheeran.in/cdn/farfuture/5uYKuOFzx9ylda65gFz2IyRVga_vUfDC_juI53cQov8/1604141227/sites/default/files/inline-images/tn%20govt%2089999_0_1.jpg)
தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு இ-பாஸ் இன்றி அரசுப் பேருந்துகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று, பேருந்துகள் இயக்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் 8 மாதங்களாக தமிழகத்தில் இருந்து புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.