






Published on 26/09/2020 | Edited on 26/09/2020
மறைந்த பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைத் தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். எஸ்.பி.பி.யின் மகன் சரண் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். விஜய்யின் பிரியமானவளே படத்தில் அவரது தந்தையாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.