Published on 22/10/2020 | Edited on 22/10/2020

ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, '11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரூபாய் 2,081.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூபாய் 7,000 முதல் அதிகபட்சமாக ரூபாய் 17,951 வரை ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக வழங்கப்படும்' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.