Published on 13/12/2019 | Edited on 13/12/2019
கேரள மாநிலம் சபரிமலை செல்ல பாதுகாப்பு கேட்டு பிந்து, பாத்திமா உள்ளிட்ட மூன்று பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, "கோயிலுக்குள் காவல்துறை நிறுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. வழக்கு தொடர்ந்த பெண்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய பாதுகாப்பு தொடரும் என்றும், தற்போதைய சூழலில் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பது முடியாது என்று மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், சபரிமலை தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் அமர்வு விரைவில் விசாரிக்கும்" என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.