
தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகரில் போலீசார் இன்று மீண்டும் நடத்திய துப்பாக்கி சூட்டில் காளியப்பன் (22) என்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் படுகாயம் அடைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைப்பெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் இன்று காலை வரை 12 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, இன்று காலை முதல் போலீசார் பொதுமக்களிடையே மீண்டும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இதில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. மற்றொரு பேருந்தின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று பிற்பகல் அண்ணாநகர் பகுதியில் போலீசார் போராட்டகாரர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் கல்வீச்சில் தூத்துகுடி மாவட்ட எஸ்.பி. மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. கல்வீச்சை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.