Published on 19/11/2018 | Edited on 19/11/2018

கஜா புயலால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக கடலோர மாவட்டங்களில் மிக அதிக அளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது மின்வாரியம் அளித்துள்ள அறிக்கையின்படி,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மொத்தம் ஒரு லட்சம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன, இதை சரிசெய்யும் பணிக்காக ஆந்திரா, மற்றும் கேரளாவை சேர்ந்த மின் ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக இதுவரை 1,000 வெளிமாநில ஊழியர்கள் வந்துள்ளனர். அதிகளவிலான மின்கம்பங்கள் முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றிருக்கிறது இதனால் வெளிமாநிலங்களிலிருந்து மின்கம்பங்கள் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், மின் சீரமைப்பு பணிகளில் இதுவரை 21,000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.