![omni](http://image.nakkheeran.in/cdn/farfuture/D5fpo-g4XNKnSuJcORAxCWcKF4nPpsx-_s0docjfDuA/1533347666/sites/default/files/inline-images/om%20chasi.jpg)
மதுரையில் பிரபல தொழிலதிபரை ரூ.5 கோடி கேட்டு மிரட்டி கூலிப்படையினர் கடத்தி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் அமைந்துள்ள ஒத்தக்கடை பகுதியில் இன்று காலை 10 மணி அளவில் வீட்டு வாசலில் இருந்து பிரபல தொழிலதிபரை ரூ.5 கோடி கேட்டு மிரட்டி கூலிப்படையினர் கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை எஸ்.பி., மணிவண்ணன், மதுரை முழுவதும் காவலர்களை அலர்ட் செய்து வருகிறார்.
மேலும், அந்த கும்பல் தொழிலதிபரை கேரளா கடத்தி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அந்த கடத்தல் கும்பல் தற்போது வரை மதுரையை தாண்ட வாய்ப்பில்லை என்றும் அவர்கள் மதுரைக்குள்ளேயே எங்கோ சுற்றி வருகிறார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மதுரை முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடத்தப்பட்டது யார்? என்பது மர்மமாக இருக்கிறது. மதுரை மாவட்ட டி.எஸ்.பிக்கள் அனைவரையும் வரச்சொல்லி எஸ்.பி., மணிவண்ணன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.