Skip to main content

மாநகராட்சிப் பள்ளிகளில்  9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020


கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. 
 


ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் வரும் கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலை இருக்கிறது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் நடப்பாண்டுகளில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகள் முடித்து வரும் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சேர இருக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. 
 


ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க பெரும்பாலான  மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால், சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க  முடிவு செய்யப்பட்டது. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன்  6 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை இலவசமாக மாணவர்களுக்கு வழங்க முடிவு செய்தது சென்னை மாநகராட்சி. 

அதன்படி சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் 70 பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு தொண்டு நிறுவனத்தின் உதவியோடு செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஆன்லைன் வகுப்புகளுக்காக தனி அட்டவணை வடிவமைக்கப்பட்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். 
 

http://onelink.to/nknapp


சென்னை திருவல்லிக்கேணி உள்ள பள்ளியில் இருந்து நடத்தப்படும் பாடங்கள் பதிவு செய்யப்பட்டு, 'GCC education' என்ற யூ டியூட் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலு வீட்டில் இருந்தப்படியே அதைத் திரும்பத் திரும்ப பார்த்துப் படிக்கலாம். 
 

 

 

சார்ந்த செய்திகள்