Published on 09/04/2022 | Edited on 09/04/2022

கடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சியின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் பட்ஜெட் தாக்கல் நடைபெற்றது. இந்நிலையில் சொத்துவரி உயர்வைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் பட்ஜெட் தாக்கலை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.