Skip to main content

2 லட்சம் ஏடிஎம்கள் முடங்கும் அபாயம்!

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

 

பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக 10 பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது.  இது குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் வெளியிட்டார். இதையடுத்து,  நான்கு பெரிய வங்கிகளுடன் ஆறு சிறிய வங்கிகளை இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த இணைப்பு நடவடிக்கையால் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைகிறது.  

a

 

இந்த நவடிக்கையினால், பொதுத்துறை வங்கிகள் சர்வதேச தரத்திற்கு  வலிமை பெறுவதுடன், நிர்வாக செலவு கணிசமாக குறைந்து, பொருளாதாரம் மேம்படும் என்று கருதுகிறது மத்திய அரசு.  ஆனால்,  இந்த இணைப்பு நடவடிக்கைக்கு  அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   வங்கிகள் இணைப்பால் நிறைய பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.   நிலைமை இப்படியே  சென்றால், நாளடைவில் இது தனியார் மயம் ஆவதற்கும் வழிவகுத்துவிடும் என்று அஞ்சுவதால் இந்த எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.  மத்திய அரசு இணைப்பு திட்டத்தை கைவிடும்வரை போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

 

no

 

அதன்படி, முதற்கட்டமாக வரும் 25ம் தேதி நள்ளிரவு முதல் 27ம் தேதி நள்ளிரவு வரை வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறார்கள்.  இவ்விரு தினங்களிலும் வங்கிகள் திறந்திருந்தாலும் எந்த ஊழியர்களும் பணியில் ஈடுபடமாட்டார்கள் என்று வங்கிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

 

இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தினால் இந்தியா முழுவதும் 2 லட்சத்து ஏடிஎம்களின் சேவை முடங்கி, 48 ஆயிரம் கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கும் என்றும், தமிழகத்தில் 20 ஆயிரம் ஏடிஎம்களின் சேவை முடங்கி, 6 ஆயிரம் கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

சார்ந்த செய்திகள்