Skip to main content

“கொடநாடு வழக்கு; ஓபிஎஸ்க்கு ஒரே ஒரு நோக்கம் தான்” -  'தமிழா தமிழா' பாண்டியன்

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Journalist Pandian Interview

 

கொடநாடு வழக்கில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் மேற்கொண்ட போராட்டத்தின் தாக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் விவரிக்கிறார்.

 

கொடநாடு வழக்கில் முதல் குற்றவாளியே பன்னீர்செல்வம் தான். இது நடந்தது அண்ணா திமுக ஆட்சியில். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன. இவ்வளவு நாட்கள் பன்னீர்செல்வத்துக்கும் தினகரனுக்கும் கொடநாடு வழக்கு குறித்து தெரியாதா? இதுதான் மக்களின் கேள்வி. 2016 தேர்தலில் செலவு செய்யச் சொல்லி பன்னீர்செல்வம், பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கொடநாட்டில் சிறை வைக்கப்பட்டனர். அவர்களுடைய சொத்துக்கள் அடங்கிய டாக்குமென்ட்கள் அனைத்தும் ஜெயலலிதா, சசிகலாவால் கைப்பற்றப்பட்டன. 

 

அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். சசிகலா சிறை சென்றார். பன்னீர்செல்வத்தையும் மற்ற மூத்த அமைச்சர்களையும் தன் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் எடப்பாடியின் கார் ஓட்டுநர் கனகராஜ் மூலம் கொடநாட்டில் இருந்த டாக்குமென்ட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. 2021 வரை துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஏன் வாய் திறக்கவில்லை? மோடி இப்போது பன்னீர்செல்வத்தை கழற்றி விட்டுவிட்டார். எடப்பாடியை பக்கத்தில் சேர்த்துக்கொண்டார். இதனால் இவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

 

அதிமுக தொண்டர்களுக்கு கோவில் போன்ற தலைமை அலுவலகத்தை அடித்து உடைத்தவர் ஓ. பன்னீர்செல்வம். அவருக்கு இப்போது அரசியல் எதிர்காலம் முடிந்ததால் கோடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளார். அதிமுகவின் மீது இப்போது பன்னீர்செல்வத்துக்கு எந்த பிடிப்பும் இல்லை. அவரோடு இருந்த அனைவரும் இப்போது எடப்பாடியிடம் சென்றுவிட்டனர். அதனால் அவர் எடப்பாடியை திமுகவிடம் காட்டிக் கொடுப்பதற்கு தயாராகிவிட்டார். இதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

இவர்களிடம் பெரிய அளவில் வாக்கு வங்கியும் இல்லை. இரட்டை இலை எங்கே இருக்கிறதோ அங்கே தான் அண்ணா திமுகவின் வாக்கு வாங்கி இருக்கும். தினகரனிடமும் பன்னீர்செல்வத்திடமும் முன்பு இருந்த தொண்டர்கள் இப்போது இல்லை. இருக்கும் தொண்டர்களையும் அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடியாது. எடப்பாடியிடம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, தொண்டர்கள், பாஜக கூட்டணி, பணம் என்று அனைத்தும் இருக்கிறது. எனவே தினகரன் மற்றும் பன்னீர்செல்வத்தால் எடப்பாடியுடன் மோதி வெற்றி பெற முடியாது. அண்ணா திமுகவினர் எங்கு அதிகாரம் இருக்கிறதோ அங்கு தான் இருப்பார்கள்.

 

 

 

Next Story

''நேரம் கனித்துள்ளது; என் அரசியல் பிரவேசம் தொடக்கம்'' - சசிகலா பேச்சு

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
 ''The time is ripe; My political entry begins'' - Sasikala speech

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அராஜகம் என்றால் திமுக... திமுக என்றால் அராஜகம்...' திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு கெட்டுள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் ஜனநாயக முறைப்படி முழு சுதந்திரமாக நடக்குமா எனக் கேள்வி எழுந்துள்ளது. எனவே இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் அதிமுக ஆட்சி மலர்வது உறுதி' எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பேசுகையில், ''விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணித்திருப்பது சரியான முடிவு அல்ல. அதிமுகவில் தற்போது குறிப்பிட்ட ஜாதியினர் ஜாதி அரசியல் செய்கின்றனர். ஆனால் எனக்குக் குறிப்பிட்ட ஜாதியினர்தான் சொந்தம் என்றெல்லாம் கிடையாது. ஜெயலலிதாவும் ஜாதி பார்த்துப் பழகியவர் அல்ல. நான் ஜாதி பார்த்து இருந்தால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கி இருக்க மாட்டேன். சிலரது சுயநலத்தால் அதிமுக சரிவை சந்தித்துள்ளது. தற்போது அதிமுக மூன்றாவது இடத்திற்கும் நான்காவது இடத்துக்கும் சென்றுள்ளது. தானும் கெட்டு கட்சியையும் சிலர் கெடுத்து விட்டனர். அதிமுகவினர் ஒன்றிய வேண்டும் என நான் அடிக்கடி கூறி வந்ததற்கான நேரம் தற்பொழுது கனிந்துள்ளது. அதிமுகவில் தன்னுடைய அரசியல் பிரவேசம் தொடங்கியுள்ளதால் கட்சி அழிந்துவிடும் என்று கூற முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும்'' என்றார்.

Next Story

'மறப்போம் மன்னிப்போம்'- நான்கு பேரிடமும் நேரம் கேட்டு புகழேந்தி கடிதம்

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
'Let's forget and forgive'- pugazhendhi letter to the four people asking for time

அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். 'ஒற்றைக் குச்சியை உடைப்பது சுலபம்; கத்தை குச்சியை முறிப்பது கடினம். இனியும் தாமதம் சொல்லி தோல்விக்குத் தொண்டர்களைப் பழக்குவது பாவ காரியம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றாக வேண்டும். கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்துக்கும் தயாராகுவோம்' என அண்மையில் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அடுத்த நாளே செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, 'எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற முன்னாள் தலைவர்களை விமர்சித்தவருடன் தேர்தல் கூட்டணி வைக்கும் ஓபிஎஸ் அதிமுக ஒன்றிணைவது குறித்து பேசத் தகுதியற்றவர். அவர் அறிவுரை சொல்லத் தேவையில்லை' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருந்த புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தங்களுடைய ஆதரவை விலக்கிக் கொண்டு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்ற புதிய குழுவை உருவாக்கி உள்ளனர். இந்த குழுவின் சார்பில் வ.புகழேந்தி தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ;ஜெயலலிதா மறைவுக்குப் பின்னும் ஒற்றுமை ஏற்பட்டு மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. மறப்போம் மன்னிப்போம் என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒன்றுபட வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைவதே அதிமுக தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது. அதிமுக ஒற்றுமை வேண்டி நான்கு பேரையும் சந்திக்க விரும்புகிறோம். ஆலோசனைகள் கருதிப் பகிர நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டுக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.