Skip to main content

அர்ச்சக பயிற்சி மாணவர்களின் 15 ஆண்டுக்கால போராட்டம்; சமூகநீதி பயணத்தில் புரட்சி..!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

15 years of struggle of priestly training students; Revolution in the journey of social justice ..!

 

2006ல் தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞரால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயில், பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகங்களில் சைவ முறை பள்ளிகளும், ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வளாகத்தில் வைணவ முறைப்படி அர்ச்சக பள்ளிகளும் தொடங்கப்பட்டன.

 

இந்த 6 பள்ளிகளில் 210 இளைஞர்கள் ஆர்வமாக சேர்ந்தனர். அவர்களுக்கு, ஆகம விதிகளின்படி பூஜை செய்வது, வேதமந்திரம் ஓதுவது போன்றவற்றை தமிழ், சமஸ்கிருதம் என்ற இரண்டு மொழியில் பாடம் நடத்தப்பட்டது. திருக்குறள், சிவபுராணம், சைவ சமயத்தின் அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள் பன்னிரு திருமுறைகள், 63 நாயன்மார் வரலாறு, தமிழ் இலக்கணங்கள், திருக்கோயில் பூஜை முறைகள் ஜோதிடம், சிறப்பு நாட்கள் (திதி, அம்மாவசை, கிருத்திகை, பிரதோசம்) பஞ்சாங்கம் என அனைத்தும் கற்று தரப்பட்டது. கருவறைக்குள் சென்று பூஜை செய்ய தீட்சை தரப்பட்டது. கற்றதை அறிய எழுத்து தேர்வு, செயல்முறை தேர்வு நடந்தது. அதில் 206 பேர் தேர்ச்சி பெற்றனர்.

 

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்குவது தவறு எனச்சொல்லி மதுரை ஆதிசிவாச்சாரியர்கள் உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தனர். உச்சநீதிமன்றத்தில் நீண்டகாலம் நிலுவையில் இருந்தது அந்த வழக்கு. அந்த வழக்கில் அர்ச்சக பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமும் இணைந்துகொண்டது. சுமார் 8 ஆண்டுகள் உச்சநீதிமன்றத்தில் பலமுறை மனுக்களை போட்டு அந்த வழக்கை எடுக்கவைத்தது. இதற்கான நீண்ட நெடிய போராட்டத்தை அர்ச்சகர் மாணவர் சங்கம் நடத்தியது.

 

2015ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற அரசாணையை, சட்டத்தை ரத்து செய்யவில்லை. எந்தெந்த கோயில்களில் என்ன மாதிரியான ஆகம விதிகளை கடைப்பிடிக்கிறார்களோ அதன்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றது. ஆனாலும் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

அதன்பின் மீண்டும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்திகொண்டுவந்தது. அர்ச்சகர் பதவிகளில் தகுதியோடு உள்ள எங்களையும் நியமனம் செய்யுங்கள் என்றுத்தான் கேட்கிறோம். நிச்சயம் வேலை கிடைக்கும் என நம்பித்தான் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தோம். அனைத்து தகுதிகளும் உள்ள எங்களுக்கு அரசாங்கம் பணி வழங்காமல் உள்ளது நியாயமா எனக் கேள்வி எழுப்பினர்.

 

15 years of struggle of priestly training students; Revolution in the journey of social justice ..!

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களை கண்டுக்கொள்ளவில்லை.

 

திடீரென 2018ஆம் ஆண்டு மதுரை புதூர் அய்யப்பன் கோயிலில் மாரிச்சாமி என்கிற அர்ச்சக பயிற்சி முடித்த மாணவரை அறநிலையத்துறை, அர்ச்சகராக நியமித்தது அப்போதைய எடப்பாடி தலைமையிலான அரசு. அதன்பின் இரண்டு ஆண்டுகள் நியமனங்களே இல்லை. மீண்டும் போராடிக்கொண்டு இருந்தார்கள் மாணவர்கள்.

 

கேரளாவில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை அர்ச்சகராக கோயில் பணியில் நியமித்ததும் நாங்களும் அனைத்து சாதிக்கும் சமமானவர்கள் என்பதைக்காட்ட 2020ஆம் ஆண்டு மதுரை நாகமலை பிள்ளயைார் கோயிலில் தியாகராஜன் என்பவர் பணி நியமனம் செய்தது அதிமுக அரசாங்கம். அதன்பின் மீண்டும் குறட்டைவிட தொடங்கியது.

 

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளநிலையில் 204 அர்ச்சக பயிற்சி முடித்த மாணவர்களுக்கு அர்ச்சகர் பணி வழங்காமல் இருப்பது நியாயமா என பலதரப்பில் இருந்தும் கேள்விகள் எழுப்பினர்.

 

2021 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அதிமுக தனது பிரச்சாரத்தில் அர்ச்சகர் பயிற்சி முடித்த அனைத்து சாதிப்பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்கியதுப்போல் விளம்பரம் செய்தது. இது கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன் இதனை கடுமையாக எதிர்த்து கண்டன அறிக்கை வெளியிட்டார்.

 

15 years of struggle of priestly training students; Revolution in the journey of social justice ..!

 

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்படுவார்கள் என்றார் அப்போதைய திமுக தலைவரும், இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தது, திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்து 100வது நாளன்று, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற திட்டப்படி படித்து, பயிற்சிப்பெற்ற 206 மாணவர்களில் முதல்கட்டமாக 50க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கியுள்ளார்.

 

சுமார் 15 ஆண்டுக்கால போராட்டத்துக்கு பின் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினால் அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கத்தின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

 

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகின்றனர். இது தமிழ்நாட்டில் சமூகநீதி பயணத்தில் பெரிய மைல்கல்.

 

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.