Published on 20/01/2025 | Edited on 20/01/2025
டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள், கோப்ரா ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் அஜய் ஞானமுத்து. கடைசியாக டிமான்ட்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருந்தார். இதையடுத்து விஷாலுடன் இணைந்து ஒரு படம் பண்ணவுள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு திருமணம் நடந்துமுடிந்துள்ளது. ஷிமோனா என்ற பெண்ணை அவர் மனமுடிந்துள்ளார். இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களை விக்ரம் நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். மேலும் பல்வேறு திரை பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இவரது திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்வு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதைப் பகிர்ந்தும் திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் மணக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.