சிதம்பரம் நடராஜர் கோவிலில் உலக நன்மை வேண்டியும், உடல் நலன், குடும்ப நலன் வேண்டியும் ருத்ர அபிஷேக பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் திங்களன்று(20.1.2024) கோயிலில் தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் சார்பில் ருத்ராபிஷேகம் நடைபெற்றது.
21 தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் ஓத பலவிதமான மூலிகை பொருட்கள் நெய் உள்ளிட்ட பொருட்களை இட்டு பட்டு வஸ்திரத்தை யாகத்தில் சாத்தி வேதம் மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன. இதில் அமைச்சர் மூர்த்தி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் குடும்பத்தின் சார்பில் சார்பாக 20 கிலோ வெள்ளியால் ஆன பல்லாக்கை கோவிலுக்குக் காணிக்கையாக அளித்துள்ளனர். இதேபோல் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பும் அமைச்சர் குடும்பத்தினர் சார்பில் மகாருத்ரபிஷேகம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.