கடந்த ஏழு மாதங்களில் ரஜினி காந்தின் காலா, 2.0, பேட்ட என மூன்று படங்கள் வெளியாகியுள்ளன. ரஜினியின் சினிமா வாழ்க்கையில் இது மிகவும் அரிதான ஒன்றாகும். ரஜினியின் மார்க்கெட் மிக அதிகமாக உயர்ந்ததில் இருந்து வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடித்து வந்தார். ஆனால், கடந்த வருடம் காலா,2.0 படங்கள் வெளியானது. அதேபோல இந்த வருட தொடக்கத்தில் பேட்ட வெளியானது.
இதற்கு முன்பு ரஜினி 1978 ஆம் ஆண்டில் மட்டும் 21 படங்கள் பல மொழிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த எழு மாதத்தில் மூன்று படங்கள் வெளியானதன் மூலம் சுமார் 1000 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
காலா படம் பெரிய ஹிட் இல்லை என்றாலும் பாக்ஸ் ஆஃபிஸில் குறிப்பிடும் அளவிற்கு வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 150 கோடி சம்பாதித்துள்ளதாக தெரிவித்திருந்தனர். பின்னர் வெளியான பிராமாண்ட படமான 2.0 பாக்ஸ் ஆஃபிஸ் சுமார் உலகம் முழுவதும் 700 கோடியை தாண்டியிருக்கிறது. இதுவரை பேட்ட படம் 167 கோடி வசூல் செய்திருப்பதாகவும் மேலும் வசூல் நிலவரங்கள் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று படத்தின் வசூலை சேர்த்தால் கடந்த ஏழே மாதங்களில் 1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளார்.