Published on 17/04/2025 | Edited on 17/04/2025






பாலாவின் ‘அவன் இவன்’ மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜனனி. பின்பு தெகிடி, அதே கண்கள், பலூன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். இடையே மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக விக்னேஷ் கார்த்திக் இயக்கிய ‘ஹாட்ஸ்பாட்’ படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் சாய் ரோஷன் ஷ்யாம் என்ற விமானியை திருமண நிச்சயம் செய்துள்ளார். இவருக்கு தற்போது திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.