Published on 30/01/2020 | Edited on 30/01/2020




தனுஷ் நடிக்கும் மூன்றாவது பாலிவுட் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ஆத்ரங்கி ரே’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அட்சய் குமார், சாரா அலிகான் ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் முந்தைய பாலிவுட் படங்களில் எழுத்தாளராக பணியாற்றிய ஹிமான்ஷு சர்மா இப்படத்தை இயக்கவுள்ளார். மேலும், பாலிவுட்டின் முன்னனி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டி-சீரிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.