Skip to main content

‘மயிலிறகே மயிலிறகே…’ - மணக்கோலத்தில் நடிகை நிலா

Published on 13/03/2024 | Edited on 13/03/2024

 

எஸ்.ஜே சூர்யா இயக்கி நடித்த அன்பே ஆருயிரே படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை நிலா. தமிழில் நிலா என்ற பெயரில் நடித்து வந்த இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வந்தார். இவருடைய உண்மையான பெயரும் மீரா சோப்ரா என்பதும் பிரபல பாலிவுட் நடிகையான ப்ரியங்கா சோப்ராவின் உறவினரின் தங்கை தான் மீரா சோப்ரா என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் கடைசியாக தமிழில் பரத் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான கில்லாடி படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், தொழில் அதிபர் ரக்‌ஷித் கெஜ்ரிவால் என்பவரை மீரா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். ஜெய்ப்பூரில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் நடந்த இவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். தற்போது, இவர்களுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.

Next Story

ஷங்கர் வீட்டு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
shankar daughter aishwarya marriage cm mk stalin wished

முன்னணி இயக்குநராக வலம் வரும் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா, பணியாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு தொழிலதிபர் மற்றும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ரோஹித் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரோகித்தை ஐஸ்வர்யா விவாகரத்து செய்தார். பின்பு ஷங்கர் வீட்டிலே வசித்து வந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் தருண் கார்த்திகேயன் என்பவரை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து திருமண விழாவிற்கு முதல்வர் ஸ்டாலின், மற்றும் திரைப்பிரபலங்கள் பலருக்கும் ஷங்கர் அழைப்பிதழ் வழங்கினார்.  

இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.