இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஜெயின் ஜார்ஜ் பார்க் ஸ்டேடியத்தில் இன்று (10.11.2024) நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதன் மூலம் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இறுதியில் இந்திய அணி நிர்ணயப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 45 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.
இதனையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களம் இறங்கியது. அதன்படி 19 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 128 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்கா அணி மூன்று விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1க்கு 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளன. முன்னதாக நடைபெற்ற முதல் தொடரில் இந்தியா அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.