Skip to main content

ஐபிஎல் ஏலம்... எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள்...

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

2020-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

 

ipl auction 2020 sold players list

 

 

சென்னை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும், இந்த ஐபிஎல் தொடருக்கான இந்த ஏலத்தின் ஏல பட்டியலில் 332 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் அனைத்து அணிகளும் சேர்த்து மொத்தம் 73 வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க வேண்டும். இந்த 73-ல் அதிகபட்சமாக 29 வெளிநாட்டு வீரர்களை எடுக்க முடியும். இந்த ஏலத்தின் தொடக்கத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் வசம் ரூ.27.85 கோடியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் ரூ.42.70 கோடியும், கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அனியிடம் ரூ.35.65 கோடியும், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் ரூ.13.05 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ.28.90 கோடியும், பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸ் அணியிடம் ரூ.27.90 கோடியும் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் வசம் ரூ.17 கோடியும், சென்னை அணியிடம் மற்ற அணிகளை விட மிகவும் குறைவாக 14.60 கோடி ரூபாயும் இருந்தது.

ஏலத்தில் முதல் வீரராக ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் இடம்பெற்றார். அவருடைய அடிப்படை விலை - ரூ. 2 கோடி. அதே தொகைக்கு மும்பை அணி அவரை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் இயன் மார்க்னைத் தேர்வு செய்ய கொல்கத்தாவும் தில்லியும் போட்டியிட்டன. இறுதியில் மார்கனை ரூ. 5.25 கோடிக்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்து. ராபின் உத்தப்பாவை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. சென்னை அணி இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாம் கர்ரனை ரூ.5.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தென்னாப்ரிக்க அணி ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ.10 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் கிலென் மேக்ஸ்வெல்லை ரூ.10.75 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கிறிஸ் வோக்ஸை ரூ.1.5 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் ஏலம் எடுத்துள்ளது. பேட் கம்மின்ஸை ரூ.15.50 கோடி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்து. அலெக்ஸ் கேரியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர் உனந்கட்டை 3 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. கோல்ட்டர் நைல் 8 கோடி ரூபாய்க்கு மும்பை அணியாலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் காட்ரெல் 8.5 கோடிக்கு பஞ்சாப் அணியாலும் ஏலம் எடுக்கப்பட்டனர். பியூஷ் சாவ்லாவை 6.75 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இந்திய வீரர்களான ஹனுமா விஹாரி, புஜாரா, ஸ்டுவர்ட் பின்னி, யூசுப் பதான் ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.