16 ஆவது ஐபிஎல் சீசனின் 66 ஆவது லீக் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 187 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சாம் கர்ரன் 49 ரன்களையும் ஜிதேஷ் சர்மா 44 ரன்களையும் ஷாருக்கான் 41 ரன்களையும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்களை வீழ்த்தினார். போல்ட், ஜாம்பா தலா 1 விக்கெட்டை எடுத்தனர். பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 189 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 51 ரன்களையும் ஹெட்மயர் 46 ரன்களையும் எடுத்தனர். பஞ்சாப் அணி சார்பில் ரபாடா 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், சாம் கர்ரன் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டார்.
இன்றைய போட்டியில் பவர் ப்ளேவில் 3 விக்கெட்களை பஞ்சாப் அணி இழந்து இருந்தது. இதன் மூலம் நடப்பு சீசனில் பவர் ப்ளேவில் அதிக விக்கெட்களை இழந்த அணி என்ற மோசமான சாதனையை கேகேஆருடன் பகிர்ந்து கொண்டுள்ளது. அதேபோல் மிடில் ஓவர்களில் அதிக விக்கெட்களை இழந்த அணி என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் படைத்துள்ளது. அந்த அணி 7 முதல் 15 ஓவர்களில் மட்டும் 40 விக்கெட்களை இழந்துள்ளது.