Skip to main content

பிரபல கிரிக்கெட் வீரர் விபத்தில் மரணம்!

Published on 06/10/2020 | Edited on 06/10/2020

 

cricket player

 

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய் சாலை விபத்தில் மரணமடைந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

 

நஜீப் தரகாய் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஆவார். 29 வயதே நிரம்பிய நஜீப் தரகாய் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடியாக விளையாடக் கூடியவர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அவர் ஜலதாபாத் நகரில் உள்ள ஒரு சாலையைக் கடக்க முயன்ற போது, எதிரே வந்த வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார்.

 

உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.