இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கொடுத்துவிட்டு டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுவிட்டது.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்க ஷிகர் தவான் தலைமையிலான இளம் அணி தேர்வு செய்யப்பட்டது. முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்ற நிலையில் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மஹாராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மார்க்ரம் மற்றும் ஹென்ட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். முடிவில் 50 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 278 ரன்களை சேர்த்தது.அதிகபட்சமாக ஹென்ட்ரிக்ஸ் 74 ரன்களும் மார்க்ரம் 79 ரன்களும் எடுத்திருந்தனர்.
279 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர்தவான் 13 ரன்களில் ஆட்டமிழக்க நிதானமாக ஆடிய சுப்மன் கில் 28 ரன்களில் வெளியேறினார். இதன் பின் கைகோர்த்த இஷான் கிஷன் மற்று ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. முடிவில் இந்திய அணி 45.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 282 அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இந்திய அணியில் ஸ்ரேயாஷ் ஐயர் 113 ரன்களும் இஷான் கிஷான் 93 ரன்களையும் எடுத்திருந்தனர்.
ஆட்டநாயகனாக ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.