Skip to main content

அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் உயிரிழந்த சோகம்!

Published on 13/05/2025 | Edited on 13/05/2025

 

Tragic passed away of 2 Indian students in America

அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சவ்ரவ் பிரபாகர் (23) மற்றும் மானவ் பட்டேல் (20). இவர்கள் இருவரும் அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள கிளிவ்லேண்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் பட்டப்படிப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி இவர்கள் இருவரும், லான்காஸ்டர் கவுண்டியில் உள்ள பென்சில்வேனியா டர்ன்பைக் நகரில் காரில் சென்று கொண்டிருந்தனர். 

இதில் சவ்ரவ் பிரபாகர் காரை ஓட்டியதாகவும், மானவ் பட்டேல் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அவர்களின் வாகனம் சாலையை விட்டு விலகி ஒரு மரத்தில் மோதியது. அதன் பின்னர், வாகனம் பாலத்தில் மோதி விபத்தானது. இந்த கோர விபத்தில், படுகாயமடைந்த இரு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

அவர்களுடன் வாகனத்தில் அடையாளம் தெரியாத மற்றொரு நபரும் பயணித்துள்ளார். அவரும் இந்த விபத்தில் காயமடைந்ததால் அவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கார் விபத்தில் இரண்டு இந்திய மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரம் இரங்கள் தெரிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்