Skip to main content

கரோனா குறித்த பயம் இனி வேண்டாம்... கூகுள் மேப்பின் அசத்தலான அப்டேட்ஸ்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

google map

 

பயணம் செய்யும் பகுதியில் உள்ள கரோனா பாதிப்பு விவரங்கள் குறித்து, பயனாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கூகுள் மேப் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட இருக்கிறது.

 

கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கரோனா வைரஸ், இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய ஒன்றாக உருவெடுத்துள்ளது. ஊரடங்கு உட்பட பல தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்தாலும், கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர இயலாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. கரோனா பாதிப்பு விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், பிரபல வழிகாட்டிச் செயலியான கூகுள் மேப், இது குறித்து புதிய அப்டேட் ஒன்றை வெளியிட இருக்கிறது.

 

அதன்படி, செயலியில் 'covid-19 info' என வசதி இருக்கும். அதைப் பயன்படுத்தி புதிதாக பயணம் செய்யும் பகுதியில் உள்ள கரோனா பாதிப்பு விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். அந்தப் பகுதியில் உள்ள பாதிப்பின் அளவைப் பொறுத்து, பாதிப்பு அதிகம், குறைவு என வேறுபடுத்திக்காட்டும் வசதியும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு விவரங்கள் நம்பத்தகுந்த பல தரப்புகளில் இருந்து பெறப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

கூகுள் நிறுவனத்தின் இந்த அசத்தல் முயற்சியானது பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூகுள் மேப் உதவியுடன் சுற்றுலாப் பயணம்; இளைஞர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
A shock awaited the youth on Touring with the help of Google Map

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியாக உள்ளது. இந்த மாநிலங்களில் இருந்து வரும், சுற்றுலா பயணிகள், கூடலூர் பகுதி வழியாக உதகை போன்ற பிற சுற்றுலாத் தலங்களுக்கு செல்கின்றனர். 

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், 3 நாள் தொடர் விடுமுறையையொட்டி தங்களது சொகுசு கார் மூலம் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலாவை முடித்துவிட்டு, பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ‘கூகுள் மேப்’ உதவியுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். அதன்படி, கூடலூர் அருகே வரும் போது, ‘கூகுள் மேப்’ காட்டிய வழியில் திடீரென செங்குத்தான படிக்கட்டுகள் வந்ததால், அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் காரை சாதுரியமாக படிக்கட்டுகளில் நிறுத்தினார். 

அதன் பின்னர், கார் ஓட்டுநர் காரில் இருந்து இறங்கி ஊர்மக்கள் உதவியை நாடியுள்ளார். இதையறிந்து உடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் பிற சுற்றுலா பயணிகள் அங்கு வந்து, காரை மீட்க முயற்சி செய்தனர்.  ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு படிக்கட்டுகளில் கற்களை அமைத்து அந்தக் காரை தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Next Story

தவறாக வழிகாட்டிய கூகுள் மேப்; சுற்றுலா சென்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

google map wrong direction young man incident idukki district 

 

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் போர்டு கொச்சியைச் சேர்ந்த எட்டு நண்பர்கள் குழுவாக இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள மலையிஞ்சி வனப்பகுதியில்  உள்ள கிழார் குன்று என்ற அருவியில் குளிக்க முடிவெடுத்து சுற்றுலா சென்றுள்ளனர். அதன்படி மலையிஞ்சி வனப்பகுதி வரை கார் செல்லும் என்பதால் அங்கிருந்து வனப்பகுதிக்கு கூகுள் மேப் உதவியுடன் நீர்வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது கூகுள் மேப் காட்டிய தவறான தகவலால் எதிர் திசையில் சுமார் 4 கி.மீ தூரம் அடர்ந்த வனத்தினுள் சென்றவர்கள் யானைகள் நடமாடும் பகுதியில் சிக்கி அங்கிருந்து மீண்டும் தங்கள் வந்த வழிக்கு திரும்ப இயலாமல் தவித்தனர்.

 

இந்நிலையில் நண்பர்கள் குழுவில் இருந்த ஜீஜூ ஜேம்ஸ் (வயது 35) என்பவர் யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பாறையில் இருந்து சுமார் 30 அடி பள்ளத்தில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதனால் பலத்த காயம் அடைந்த அவரால் எழுந்து நடக்க கூட முடியவில்லை. இந்நிலையில் திருவனந்தபுரம் காவல்துறையினருக்கு அவருடன் சுற்றுலா வந்தவர்கள் தகவல் அளித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை உதவியுடன் காயமடைந்த ஜீஜூ ஜேம்ஸை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சுற்றுலா சென்றவருக்கு ஏற்பட்ட இந்த சம்பவம் வந்திருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.